முன்னாள் நீதவான் திலின கமகேயின் பிணை அனுமதி ரத்து

🕔 June 13, 2016

Thilina gamage - 0989கொழும்பு மேலதிக முன்னாள் நீதவான் திலின கமகேவின் பிணை அனுமதியை தற்காலிகமாக ரத்துச் செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் மீளாய்வு மனுவொன்று இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கங்கொடவில நீதிமன்றத்தால், திலின கமகேவுக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதியை ரத்துச் செய்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, கொழும்பு மேல் நீதிமன்றத்தால், திலின கமகேவின் பிணை அனுமதி தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட திலன கமனே, அண்மையில் கங்கொடவில நீதிமன்றத்தில் சரணடைந்ததோடு, பின்னர் பிணையிலும் விடுவிக்கப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்