ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி

🕔 June 13, 2016


ஸ்ரீ
லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்றதாக கிழக்கு மாகாண ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் தெரிவித்தார்

இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும், மாணவ நலன் பிரிவு பணிப்பாளர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி வைத்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்ற கறுப்புப் பட்டி சிரேஷ்ட மாணவர்களுக்கான நடுவர் கருத்தரங்கு மற்றும் நடுவர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்களையும், நேற்றைய நிகழ்வில் வைத்து, பேராசிரியர் நாஜிம் வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்