அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

🕔 June 11, 2016

ADJF - Logo - 01ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பேரவையின் இப்தார் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார்.

பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம். ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் சமய தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையானது, ஊடகவியல் தொடர்பான செயற்பாடுகள் மட்டுமன்றி பல்வேறுவிதமான சமூக நல நடடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்