பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் நிதியுதவி

🕔 June 10, 2016

– அஷ்ரப் ஏ சமத் –

வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கியது.

மேற்படி குடும்பங்களுக்கு மொத்தமாக 25 லட்சம் ரூபா நிதி – கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதரகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50ஆயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா்  மேஜா் ஜெனரல் செய்யத் சக்கீல் ஹுசைன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்