தலங்கம கைக்குண்டு தாக்குதலில் மூவர் பலி; சிறுமி படுகாயம்

🕔 June 9, 2016

Grenade attack - 012கொஸ்வத்த – தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததோடு, சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் வெடிப்புச் சம்பவத்தில், இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

வழிபாட்டுத் தலமொன்றக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் மற்றும் மகள் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்