ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம்

🕔 June 8, 2016

President’s House  - 855
பொது
மக்களின் பார்வைக்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கிணங்க, பொதுமக்களின் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில், ஜுன் 14 ஆம் திகதி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிடலாம்.

இன்றைய தினம் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோர் மாளிகையை பார்வையிட்டனர்.

இதன்போது, முன்னைநாள் ஜனாதிபதிகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியையும் ஜனாதிபதி உள்ளோர்டோர் பார்வையிட்டனர்.

இத் தருணத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்தை, மைத்திரி மற்றும் சம்பந்தன் உள்ளிட்டோர் பார்த்துக் கடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்மொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் படம் ஆயிரம் கதைகள் சொல்வது போல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்