காயிதே மில்லத் ஆவணப்பட இறுவட்டு அறிமுக விழா
– அஸ்ரப் ஏ. சமத் –
இந்திய அறிஞரும், அரசியல் வாதியுமான காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் கொண்ட இறுவட்டு அறிமுக விழா, நேற்று வெள்ளிக்கிழமை மருதானை ஜம்மியத்துல் ஷபாப் மண்டபத்தில் இடம்பெற்றது.
முஸ்லீம் மீடியா போரம் தலைவரும், நவமணி நாளிதழின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் – சிரேஸ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌஸி பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனா்.
இதன்போது, மேற்படி இறுவட்டின் தயாரிப்பாளரும் இலக்கியவாதியும் எழுத்தாளருமான, இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த ஆளுா் ஷா நவாஸ் – பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இறுவட்டின் முதல் பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.