சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு

🕔 June 12, 2015

Mettha samaja - 01– றியாஸ் ஆதம் –

முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரவுக்கு ஆதரவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த காலங்களில்  செயற்பட்ட ‘மெத்தா சமாஜ’ அமைப்பினர், எதிர்வரும் காலங்களில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கிணங்க, மேற்படி அமைப்பினர் அண்மையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து, அக்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.

இதன்போது, பரந்தன் ரசாயனக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.எம். றமீஸ் உட்பட  பல முக்கியஸ்தர்களும்  சமூகமளித்திருந்தனர்.Mettha samaja - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்