ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம்

🕔 June 12, 2015

Fire accident - 01– வி. சுகிர்தகுமார் –

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால்,   40ற்கும் மேற்பட்ட கணணிகள் தீக்கிரையாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னொழுக்கினால் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொதுமக்களின் உதவியுடன் – பொலிசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்துக் காரணமாக, ஆய்வு கூடமும் சேதமடைந்துள்ளது.Fire accident - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்