பிரான்ஸிலிருந்து புறப்பட்ட எகிப்திய விமானம், 69 பேருடன் மாயம்

🕔 May 19, 2016

Paris - Cairo - 099
பி
ரான்ஸின் தலைநகரம் பரீஸிலிருந்து எதிப்திய தலைநகரம் கெய்ரோவுக்குப் பயணித்த எகிப்து ஏர் விமானம் மாயமாகியுள்ளது.

பரீசிலிருந்து நேற்று புதன்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 11:09 மணிக்கு கிளம்பிய விமானத்தில் 59 பயணிகளும், விமான பணியாளர்கள் 10 பேரும் பயணித்துள்ளனர்.

வானில் 11,000 மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ராடாரிலிருந்து மறையும் போது எகிப்திய வான்வெளியில்பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாயமானதற்குக் காரணம் என்னவென்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை..

கடந்த மார்ச் மாதத்தில் அலெக்சாண்ட்ரியா-கெய்ரோ எகிப்துஏர் விமானம் மனநிலை சரியில்லாத நபர் ஒருவரால் கடத்தப்பட்டது. தனது மாஜி மனைவியைக் காண்பதற்காக, குறித்த நபர் –  விமானத்தை சைப்ரஸுக்கு மிரட்டிக் கடத்திச் சென்றதாக பின்னர் தகவல் வெளியானது.

இவர் 06 மணி நேரங்கள் கழித்து சரணடைந்தார். இந்நிலையில் தற்போது பாரிஸ்-கெய்ரோ விமானம் ராடாரிலிருந்து மாயமாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்