சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம்

🕔 May 19, 2016

Lady arrested - 08ளைஞர் ஒருவரை கடத்தி, பலவந்தமாக  திருமணம் செய்து கொள்ள முயச்சித்த குற்றச்சாட்டில், யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞனுக்கு வயது 23 என்றும், கடத்திய யுவதிக்கு 25 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையில் நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

ராணுவ வீரரொருவர் உள்ளிட்ட 06பேரை கொண்ட குழுவுடன் மூன்று முச்சக்கர வண்டியில் வந்த யுவதி – மேற்படி இளைஞனை கடத்தியுள்ளார்.

கொரியன் மொழி பாடத்தைக் கற்பதற்கான வகுப்புக்கு, தனது நண்பர்கள் இருவருடன் சென்று சென்று கொண்டிருந்தபோதே, குறித்த இளைஞர் கடத்தப்பட்டார்.

மேற்படி இருவருக்கும் பேஸ்புக் ஊடாக காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி குறித்து பாணந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி யுவதி தெரிவிக்கையில்;

சம்பந்தப்பட்ட இளைஞன் தன்னைக் காதலித்து வந்த நிலையில், காதலைக் கைவிட்டு, வெளிநாடு செல்வதற்குத் திட்டமிட்டதாகக் கூறினார்.

இதனையடுத்தே, இளைஞனைக் கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்வதற்கு, குறித்த யுவதி திட்டமிட்டிருந்தார்.

இந்த கடத்தில் தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்.

Comments