தலைப்புச் செய்திகள்

சொகுசு வாகனத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

சொகுசு வாகனம் ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பான வழக்கின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு மொத்தம் 130,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதவான் இன்று (25) இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், மூன்று தனித்தனி குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தண்டனைகளை விதித்தார்.

முதலாவது குற்றச்சாட்டுக்காக, ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டத.; இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இரண்டாவது குற்றச்சாட்டுக்காக, நீதிமன்றம் 100,000 ரூபாய் அபராதத்தையும், 06 மாத சாதாரண சிறைத்தண்டனையையும் விதித்தது; இந்தச் சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குற்றச்சாட்டுக்காக, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக மூன்று மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

முன்னாள் அமைச்சருக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 130,000 ரூபாயாகும்.