
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் ஏ.எம். சாஜித் அஹமட் ‘கலைஞர் சுவதம் விருது – 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற பிரதேச இலக்கிய விழாவின் போது, இந்த விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் இலக்கியத் துறையில் ஆற்றிவரும் பணிகளையும், தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்புகளையும் பாராட்டி, கௌரவித்து வழங்கப்படும் ‘கலைஞர் சுவதம் விருது – 2026’ இவ்வாண்டு – தமிழ் ஆசிரியர் ஏ. எம். சாஜித் அஹமட்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்ற ‘நிறம் பூசும் குழந்தைகள்’ என்ற கவிதை நூல், பஞ்ச பூதம் மற்றும் இது புத்தன் காலம் எனும் நாவல்களையும் சாஜித் எழுதியுள்ளார்.
‘ஈஸ்டர்; குருதிக் கசடும் மறுப்பும்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றினையும், சாஜித் எழுதியுள்ளார்.



