தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை மாணவர் அப்துல்லா; உயரம் பாய்தல் போட்டியில், தேசிய மட்டத்தில் மூன்றாமிடம் பெற்று சாதனை

MYMUN உரிமையாளர் றிஸ்னி, பரிசுப்பொதியொன்றை அப்துல்லாவுக்கு வழங்குகிறார். அருகில் விளையாட்டு ஆசிரியர் ஜெஸீல்

– மப்றூக் –

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். அப்துல்லா, பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, உயரம் பாய்தலில் மூன்றாமிடத்தை வென்றுள்ளார்.

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி – 2026, அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில், என். அப்துல்லா கலந்து கொண்டு – மூன்றாமிடத்தைப் பெற்றார்.

இவர் ஏற்கனவே 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான – மாகாண மட்டப் போட்டியில்,1.98 மீற்றர் உயரம் பாய்ந்து, மாகாண சாதனையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு, அப்துல்லா மூலமாக, இந்த வருடத்துக்கான முதல் தேசிய பதக்கம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாதனை மாணவர் அப்துல்லா – காலம் சென்ற ஆசிரிய ஆலோசகர் நிலூபர் மற்றும் ஆசிரியை றஹீமா ஆகியோரின் மகனாவார்.

மாணவர் அப்துல்லாவின் திறமையைப் பாராட்டி, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள MYMUN ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ரிஸ்னி அவர்கள், அண்மையில் பரிசுப் பொதியொன்றை வழங்கினார்.