தலைப்புச் செய்திகள்

இந்திய சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானர்

இந்தியாவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் தாமோதரன் கோதண்டராமன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (25) காலமானார். அவருக்கு 72 வயதாகிறது.

அவர் உணவக முகாமைத்துவம் மற்றும் சமையல் தொழில்நுட்பத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமைக்குரியவர்.

சமையல் இவர் மூன்று கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் 21 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

1986ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்த அவர், பல உணவக முகாமைத்துவ கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 

விஜய் டிவி நடத்தி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம், செஃப் தாமு பிரபலமாக அறியப்பட்டுள்ளார்.