தலைப்புச் செய்திகள்

முன்னாள் மாநகர சபை உறுப்பினர், கஞ்சா கடத்திய போது கைது

கேளர கஞ்சா கடத்திய புத்தளம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நகுலேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு (PNB) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (18) புத்தளம், தில்லையடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர் கைதனார்.

சந்தேக நபர் தில்லையடியிலிருந்து புத்தளம் நகருக்கு கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து பொலிஸார் சோதனையிட்டனர். அப்போது, ​​மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 02 கிலோகிராம் கஞ்சா பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை, இன்று (19) புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.