
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துகளைப் பரிசீலித்த பின்னரே, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.



