தலைப்புச் செய்திகள்

ஷிரந்திக்கு விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கிருலப்பனை வீட்டில் வைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், இன்று புதன்கிழமை (7) காலை – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.

அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாயை ஷிரந்தி ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாகவும், அந்த நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் – பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளின் கீழ், குற்றங்களை இழைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையிலான ‘சிறிலியா சவிய’ (Siriliya Saviya) அமைப்பு தொடர்பான நிதி நடவடிக்கைகளுடனும் இந்த விசாரணை தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.