தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 07 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிப்பு

விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 07 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து இன்று (01) தீர்ப்பளித்துள்ளது.

ஊழல் குற்றத்தைப் புரிந்தமையினால் – அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார் எனக் குற்றம் சாட்டி, விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மீது லஞ்ச – ஊழல் ஆணைக்குழு வழக்குப் பதிவு செய்தது.

2014-ஆம் ஆண்டில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​ மாரவிலவில் உள்ள ஒரு விடுதிக்கு, 3,30000 பணத்தை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதன் விளைவாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், முன்னாள் அமைச்சருக்கு எதிராக இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

நீதிமன்றம் முதல் குற்றச்சாட்டுக்கு ஏழாண்டு சிறைத்தண்டனையும், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு மேலும் ஏழாண்டு சிறைத்தண்டனையும் விதித்தது.

அதன்படி, இவ்விரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக, பதினான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

தண்டனைத் தீர்ப்புடன, 200,000 ரூபாய் அபராதம் செலுத்துமமாறும் முன்னாள் அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டது.