தலைப்புச் செய்திகள்

ரவி கருணாநாயக்க MP கைது

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவை லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆணைக்குழு முன்னையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (31) காலை ஆஜரானபோது, ​​கைது செய்யப்பட்டார்.

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டமொன்றுக்காக நியமிக்கப்பட்ட மூன்று ஊழியர்களை, தனது சொந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு ரவி கருணாநாயக்க பயன்படுத்தினார் எனும் குற்றசாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக, அவர் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் பொருட்டு, ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர் அதனைப் புறக்கணித்து வந்தார்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் – ஆணைக்குழுவின் அதிகாரிகள், ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.