
ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை – ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு, காலி பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களில் தற்போது 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே – காலி பிரதம நீதவான் சமீரா தொடங்கொட இன்று (11) காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
காலி துறைமுக பொலிஸார் – காலி பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமீபத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ மூழ்கிய பின்னர் இந்த உடல்கள் மீட்கப்பட்டன.


