
புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல-வை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வல்பொல கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, சற்று நேரத்திற்கு முன்பு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ஆணைக்குழு நடத்தும் விசேட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் வருகை தந்துள்ளார்.


