தலைப்புச் செய்திகள்

மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில், மீண்டும் மலேரியா மரணம்

இலங்கையில் மொத்தம் 35 மலேரியா நோயாளிகள் இந்த ஆண்டு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம் (The Anti Malaria Campaign) தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இலங்கை – மலேரியா இல்லாத நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் சமீபத்திய சம்பவங்கள், பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்களிடையே பதிவாகியுள்ளதாக தேசிய மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம் குறிப்பிட்டுள்ளது.

நிலைமை குறித்து கருத்து தெரிவித்த மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் இந்தீவரி குணரத்ன, 071 284 1767 என்ற எண்ணைத் தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் மலேரியா பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்று தெரிவித்தார்.