
நான்கு வகையான மீன் இனங்களின் இறக்குமதி மற்றும் விற்பனை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவை ‘ஆக்கிரமிப்பு அலங்கார’ மீன் இனங்களாகும். குறித்த தடையை விதித்து – மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு – வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரன்ஹா (Piranha) நைஃப் ஃபிஷ் (Knife Fish), அலிகேட்டர் கர் (Alligator Gar) ரெட்லைன் ஸ்நேக்ஹெட் (Redline Snakehead) ஆகிய மீன் இனங்களுக்கு, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்தல், நீர் நிலைகளில் விடுதல், கொண்டு செல்வது, வாங்குதல், விற்பனை செய்தல் அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்துதல், வைத்திருத்தல், இறக்குமதி செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த மீன்கள் அதிக தொகையில் வேகமாகப் பரவி மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் கொண்டவை என்பதால் அவை ‘ஆக்கிரமிப்பு இனங்கள்’ என்று வரையறுக்கப்படுகின்றன.



