
‘ஐ’ஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள்கள், கந்தானையிலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் – மேற்படி ரசாயனப் பொருள், இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது தடுப்புக் காவலிலுள்ள சந்தேக நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கந்தானையில் உள்ள மேற்படி இடத்தில், 100 கிலோவுக்கும் அதிகமான ரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட ரசாயனப் பொருட்கள், கடந்த வாரம் மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ரசாயனப் பொருளைப் போன்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை – நெடோல்பிட்டிய பகுதியில், ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை பொலிஸார் கைப்பற்றியமையும் நினைவுகொள்ளத்தக்கது.



