தலைப்புச் செய்திகள்

ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கு, ஊடகவியலாளர் போல் வந்தவர் கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவை, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊடகவியலாளர் போல் வந்து, கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு மாகாண – வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று (02) குறித்த நபரை மஹரகம பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேக நபரிடம் ஒரு ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி, பல தோட்டாக்கள் மற்றும் ஊடகவியலாளராகக் காட்டிக்கொள்வதற்காகப் பயன்படுத்தியதாக நம்பப்படும் பகுதியளவு எரிந்த வீடியோ கேமரா ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

இந்த கொலை முயற்சிக்கு – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் மனுதினு பத்மசிறி பெரேரா, அல்லது கெஹல்பத்தர பத்மே உத்தரவிட்டதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்த அறிவுறுத்தல்களின் கீழ் தாக்குதலை நடத்தத் தயாராகி வந்ததாக பொலிஸார் நம்புகின்றனர்.