
40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளுடன், இன்று (25) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடா பிரஜையொருவர் கைதானார்.
52 வயதான குறித்த நபர் – விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ வழியாக செல்ல முயன்றபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் கனடாவிலிருந்து போதைப்பொருட்களை கொண்டு சென்று கத்தார் – தோஹா வழியாக இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அவரின் பொருட்களை பரிசோதித்தபோது, அதில் 12.196 கிலோகிராம் ஹஷிஸ் மற்றும் 5.298 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.



