தலைப்புச் செய்திகள்

அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

அம்பலாந்தோட்ட பொலிஸ் பிரிவின் கொக்கல்லா பகுதியில்லுள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

கொக்கல்லாவ – அம்பலாந்தோட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய காயமடைந்த நபர், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால தனிப்பட்ட தகராறின் விளைவாக – இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.