
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெய்யந்தர பகுதியில் இன்று (30) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21ஆம் திகதி – ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவாகும்”
“பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது” என்றார்.



