
உள்ளூராட்சித் தேர்தலின் போது – பிரச்சாரம் செய்வதற்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் – ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகை, மன்னார் வட்டாரத்துக்கு ஒரு வாக்காளருக்கு 74 ரூபாய் ஆகும். நாட்டில் இதுவே மிகக் குறைந்த செலவுத் தொகையாகும்,
அதேவேளை லஹுகல வட்டாரத்துக்கு – ஒரு வாக்காளருக்கு 160 ரூபாயை ஒரு வேட்பாளர் செலவிட முடியும். இதுதான் நாட்டிலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் – ஒரு வாக்காளருக்கு ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய அதிக தொகையாகும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏனைய அனைத்து வட்டாரங்களிலும் மேற்கூறப்பட்ட இரண்டு தொகைகளுக்கும் இடைப்பட்ட தொகை, அதிகபட்ச செலவு வரம்பாக அமையும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



