தலைப்புச் செய்திகள்

தேசிய புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை – பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) நேற்று புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து, மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.