தலைப்புச் செய்திகள்

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலுக்கு நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் மூலம், நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

நடந்து முடிந்த பொதுத் தெர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 03 ஆசனங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று தேசியப்பட்டில் ஆசனமாகும்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 146 ஆசனங்களைப் பெற்ற பொதுஜன பெரமுன, இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 350,429 (3.14%) வாக்குகளை மட்டும் பெற்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ, நாடு முழுவதிலும் இருந்து 342,781 வாக்குகளையே பெற முடிந்தது, இது மொத்த வாக்குகளில் 2.57% ஆகும்.

பொதுஜன பெரமுன சார்பாக காலி மாவட்டத்தில் போட்டியிட்டு 8,447 விருப்பு வாக்குகளைப் பெற்ற சானக சம்பத் மற்றும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் போட்டியிட்டு 16,546 வாக்குகளைப் பெற்ற முன்னாள் ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க ஆகியோர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.