தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் ப. சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் டொக்டர் சத்தியலிங்கம் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார், இருப்பினும் அந்த மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்ததால், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சத்தியலிங்கம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து இலங்கை தமிழரசுக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் கூலம், டொக்டர் ப. சத்தியலிங்கம் நாடாளுமன்றம் பிரவேசிக்கவுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், இன்று (17) வவுனியாவில் நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.