மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

🕔 February 12, 2016

Foreign Employment Bureau - 01ஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான் குலரத்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

வீட்டுப் பணியாளாக சஊதி அரேபியாவில் கடமையாற்றிய 41 வயதுடைய மேற்படி பெண், அந்த நாட்டில் தொழில் செய்யும் இலங்கை வாலிபர் ஒருவருடன் சட்டரீதியற்ற பாலியல் தொடர்பினைக் கொண்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண்ணை கல்லெறிந்து கொல்லுமாறு கடந்த டிசம்பர் மாதம் சஊதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மேற்படி பெண்ணை மன்னிக்குமாறு சஊதி அரசிடம் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்து வந்தது. இதனைக் கருத்திற்கொண்டு, அந்தப் பெண்ணுக்கான மரண தண்டனையினை மூன்று வருட சிறைச்தண்டனையாக சஊதி அரசாங்கம் மாற்றியுள்ளது.

இது தொடர்பில், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான் குலரத்ன மேலும் தெரிவிக்கையில்;

” குறித்த பெண் ஏற்கனவே சிறையில் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் ஒன்றரை வருடங்களை சிறையில் கழித்துள்ளார். எனவே, இன்னும் ஒன்றரை வருடங்கள்தான் அவர் சிறையிருக்க வேண்டியுள்ளது. அந்தவரையில், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் அவரின் சிறைக்காலம் நிறைவடையும். அதன் பிறகு அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்