தலைப்புச் செய்திகள்

ரி56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களுடன் ஓட்டமாவடி நபர் கைது

ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் ஓட்டமாவடியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரை – அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள், இரண்டு மகசீன்கள், 60 தோட்டாக்கள், ஒரு தொலைநோக்கி மற்றும் வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.