
ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
“ஒக்டோபர் ஐந்தாம் திகதி தேர்தல் நடத்தப்படும்” என்று கூறிய அமைச்சர்; எதிர்வரும் ”தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவார்” எனவும் கூறினார்.
காலியில் இன்று (14) பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.



