வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம்

🕔 June 14, 2024

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்த அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

எஸ். அக்கஷயன் எனும் 20 வயதுடைய மேற்படி மாணவர் – தனது குடும்பத்தினருடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று(14) காலை ஊருக்குத் திரும்பும் வழியில் – பொத்துவில் மற்றும் லாகுகலை பிரதேசங்களுக்கு இடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, இந்த மாணவர் வைத்தியத் துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்தார்.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் கற்ற இவர், உயர்தரப் பரீட்சையில் மூன்று ‘ஏ’ சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்