பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, 26 லட்சம் ரூபா பறித்த முன்னாள் காதலர் தொடர்பில் புகார்

🕔 March 13, 2023

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, அவரிடமிருந்து 26 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்ட – குறித்த பெண்ணின் முன்னாள் காதலரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடமும் பகிரப்போவதாக சந்தேக நபர் அச்சுறுத்தி, பல தடவை அவரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடச் செய்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சந்தேக நபருடன் – குறித்த பெண்ணுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதன்போது, அந்தப் பெண்ணை அவர் நிர்வாணமாக படம் எடுத்துள்ளார்.

இவர்களின் தொடர்பு முடிவுக்கு வந்த பின்னர், சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – குறித்த பெண்ணை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும், பணம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அப்பெண் முறைப்பாடு செய்துள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக – பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்