13ஆவது திருத்தம் தொடர்பான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; அமுல்படுத்தக் கூடாது என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

🕔 February 2, 2023

ரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 02) ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் சுதந்திரம் தொடர்பான கடுமையான கவலைகளை உருவாக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாக 13வது திருத்தம் இருப்பதாக அவர்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவே கூடாது என வலியுறுத்தினர்.

கடந்த மாதம், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை சம்மதம் தெரிவித்திருந்ததாக ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

இதன்படி, 13வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்படாவிட்டால், முழுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர, 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தனது பகிரங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்