ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளமா; இனி வரி செலுத்த வேண்டும்: முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

🕔 January 1, 2023

மாதாந்தம் 150,000 ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோர் வரி செலுத்தும் நடைமுறை இன்று தொடக்கம் அமுலுக்கு வருகிறது.

வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இவ்வாறு அமுலுக்கு வருகின்றன.

அதற்கமைய மாதாந்த சம்பளத்துக்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும்.

மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500 ரூபா அறவிடப்படும். மாதச் சம்பளம் 02 லட்சம் ரூபாய் என்றால், மாத வரித் தொகை 10,500ரூபாவாகும். 250,000 ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபர் 21,000 ரூபாவையும், 300,000 ரூபா சம்பளம் பெறுபவர் 35,000 ரூபாவையும் வரியாக செலுத்த வேண்டும்.

350,000 மாத சம்பளம் பெறுபவர் 52,500 ரூபாவையும், 04 லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர் 70,500 ரூபாவையும், 05 லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர் 106,500 ரூபாவையும் வரியாக செலுத்த வேண்டும்.

மேலும், 750,000 ரூபா சம்பளம் பெறுபவர் மாதாந்தம் 196,500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும், பத்து லட்சம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் இருந்து பெறப்படும் வரித் தொகை 286,500 ரூபாவாகும்.

இன்று முதல் அமுலுக்கு வரும் தனிநபர் வருமான வரியானது ஒரு லட்சம் ரூபா வரை சம்பளம் பெறுபவர்களுக்கு அறவிடப்படாது எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்