பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயதில் மரணம்

🕔 September 8, 2022

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி இன்று (08) காலமானார். பக்கிங்

பிரித்தானியாவின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.

வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரின் குடும்பத்தினர் ஒன்று கூடினர்.

1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.

அவரின் மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரின் மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 அணிசேரா நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் எனும் முழுப் பெயருடைய இரண்டாம் எலிசபெத் மகாராணி – லண்டனில் உள்ள மேஃபேரில் 21 ஏப்ரல் 1926 இல் பிறந்தார்.

Comments