ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

🕔 September 8, 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை எதிர்வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்க அமைச்சருக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சனத் நிஷாந்த உட்பட, மனுக்களின் பிரதிவாதிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் சனத் நஷாந்த நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அரகலய போராட்டக்காரர்களையும் நீதிமன்றங்களையும் தொடர்புபடுத்தி, அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

சனத் நிஷாந்தவின் இந்தக் கருத்து – நீதிமன்றதை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சனத் நிஷாந்தவின் கருத்து நீதித்துறையை அவமதிப்பதாக, நாடாளுமன்றிலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டன.

இன்று ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 37 பேரில் சனத் நிஷாந்தவும் ஒருவராவார். அவருக்கு நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்