பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

🕔 August 22, 2022

– பைஷல் இஸ்மாயில் – 

ட்டதாரி ஆசிரியர் பதவிக்கானவர்களைத் தெரிவு செய்வதற்குரிய நேர்முகத் தெரிவு, நாளை (23) தொடக்கம் இரு நாட்கள் திருகோணமலையில் நடைபெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தினால், அது – மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலையில் நடைபெறவிருந்த மேற்படி நேர்முகத் தேர்வு, தவிர்க்க முடியாத காரணத்தினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம். கோபாலரத்தினம் கூறினார்.

நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) மேற்படி நேர்முகத் தேர்வுகள் நடைபெறவிருந்தன.

இந்த நேர்முகத் தேர்வுக்கான திகதி – பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்