பொதுமன்னிப்பு கோரும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் ரஞ்சன்

🕔 August 13, 2022

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பொதுமன்னிப்புக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த ஆவணத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார் என, ஜனாதிபதி சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன இன்று (13) உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

Comments