நாடு முழுவதும் மேலும் பல ‘லங்கா ஐஒசி’ எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்க அனுமதி

🕔 August 8, 2022

லங்கையில் மேலும் பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறப்பதற்கு லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஒசியின் புதிய எரிபொருள் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

லங்கா ஐஒசி நிறுவனம் 2022 ஜூன் 30இல் முடிவடைந்த காலாண்டில் வருவாய் மற்றும் லாபங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.

இதன் வருவாய் ஆண்டுக்கு 196 சதவீதம் அதிகரித்து ரூ.49.93 பில்லியனாக உள்ளது என்றும், விற்பனை அளவும் ஆண்டு அடிப்படையில் 135,354 மெட்ரிக் தொன்னில் இலிருந்து 139,762 மெட்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது எனவும் லங்கா ஐஒசி தெரிவித்துள்ளது.

Comments