பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளை, விளக்கப்படுத்தும் நிகழ்வு

🕔 August 8, 2022

‘பெண்கள் மற்றும் பிள்ளைகளை சமாதான நல்லிணக்க செயட்பாடுகளில் வலுப்படுத்தல்’ (WAGE) எனும் திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான ‘கூட்டிணைந்த
செயற்திட்டத்துக்காக’ (Collaborative action plan) பயிற்றப்பட்ட பெண் தலைவிகளால் எழுத பட்ட – திட்ட முன்மொழிவுகளை, பல தரப்பட்ட பங்குதார குழு (Multi Stake Holders Working Group ) உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கப் படுத்தும் நிகழ்வு, நேற்று (07) கல்முனை ஹோட்டலொன்றில் இடம்பெற்றது.

‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ (Search for common ground) நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றை தளமாகக் கொண்டியங்கும் ‘பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கு’ (AWF) நிறுனத்தால் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது.

05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம மட்ட கழக உறுப்பினர்களால் (WILL) இந்தத் திட்ட
முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ (Search for common ground) நிறுவன ஆலோசகர் நளினி ரெட்னாராஜா, கண்காணிப்பு முகமையாளர் சதாத் மொஹமட், கிரமீன் பௌண்டேசன் இந்தியா (GRAMEEN FOUNDATION INDIA) நிறுவனத்தின் பொருளாதார ரீதியில் பெண்களை வலுவூட்டும் ஆலோசகர் கே. சுபாஜினி, ‘பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கு’ நிறுவன இணைப்பாளர் வாணி சைமன், ‘பெண்கள் மற்றும் பிள்ளைகளை சமாதான நல்லிணக்க செயட்பாடுகளில் வலுப்படுத்தல்’ (WAGE) திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன் மற்றும் பிரதேச சபைகளின் பெண் உறுப்பினர்கள், சிவில் சமூக பெண்கள், சமூக மட்ட தலைவர்கள், அரச – அரச சார்பற்ற மேல் நிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments