இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

🕔 August 8, 2022

லங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணை உத்தரவை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 28ஆம் திகதி அவர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 03ஆந் திகதி கைது செய்யப்பட்டார்.

இவரை 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று அவரின் சட்டத்டதரணிகள் முன்னகர்த்தல் பத்திரமொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, அவருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவரின் கைதுக்கு எதிராக சர்வதேச ரீதியில் கண்டனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments