மின்வெட்டு நேரம் இன்றிலிருந்து குறைகிறது

🕔 August 5, 2022

நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மின்வெட்டு காலப் பகுதி நாளொன்றுக்கு 01 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இரவு வேளையில் இன்று (05) தொடக்கம் 01 மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதுவரை மூன்றரை மணித்தியாலங்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments