தானிஷ் அலிக்கு விளக்க மறியலுக்கு மேலாக, 14 நாட்கள் சிறைத்தண்டனை: வெலிக்கடைக்கும் மாற்றப்பட்டார்

🕔 August 4, 2022

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி மெகசின் சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தானிஷ் அலி – எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி – சிறைச்சாலைகள் விதிமுறைகளை மீறி தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைச்சாலை நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, தானிஷ் அலி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து, அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

Comments