
பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபத் மகாராணி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
‘இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனதிபதியாக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அன்பான நட்புறவைத் தொடர விரும்புகிறேன்’ எனவும் மகாராணி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக மகாராணியின் வாழ்த்துச் செய்தி – இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்வி வைக்கப்பட்டுள்ளது.



